விளையாட்டு

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது குற்றச்சாட்டு


கிறிஸ்டியானோ ரொனால்டோ 13 மில்லியன்  பவுண்கள்  வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ,  ஸ்பெயின் நாட்டின் முன்னணி கழக அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.  2011 இலிருந்து 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்  கால்பந்தாட்டப் போட்டிகளிலும் விளம்பரங்களிலும் சம்பாதித்த வருமானத்திலேயே அவர் வரிஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி, ரொனால்டோ மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்கு நான்கு மாதம் என 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Leave a Reply