192
வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைநிதி (PSDG) ரூபாய் 6 மில்லியன் ஒதுக்கீட்டில் வன்னேரிப் பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் வடமாகாண முதலமைச்சரினால் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது
பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்ற வன்னேரிக் குளத்தை அண்டிய பகுதியிலேயே இவ் சுற்றுலா மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து பருவகாலப் பறவைகளும் அதிகம் வருகை தருகின்றமையால் குறித்த பிரதேசத்தை எதிர் காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக்கும் நோக்கோடு இவ் மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இன் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை வடமாகாண ஆளுநரின் செயலாளர் கரைச்சிப் பிரதேச சபை செயலாளர் கரைச்சிப் பிரதேச செயலர் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Spread the love