விளையாட்டு

பங்களாதேஸ் பிராந்திய அணியொன்றின் பயிற்றுவிப்பாளராக மஹல தெரிவு


பங்களாதேஸ் பிராந்திய அணியொன்றின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். Khulna Titans  என்ற பங்களாதேஸ்  பிராந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவே மஹல ஜயவர்தன கடமையாற்ற உள்ளார். எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு மஹல ஜயவர்தன இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இம்முறை சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மஹல கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply