பிரபல ரோம கழகத்தின் முன்னணி கால்பந்தாட்ட வீரர் பிரான்ஸிஸ்கோ ரொற்றி (francesco Totti ) கழக மட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டுள்ளார். டோடி கடந்த 25 ஆண்டுகளாக ரோம கழகத்தின் சார்பில் விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 40 வயதான டோடி ரோம கழகத்தின் சார்பில் 786 போட்டிகளில் 307 கோல்களைப் போட்டுள்ளார்.
நல்ல கனவு ஒன்றைக் காணும் பொழுது தாய் வந்து துயில் எழுப்பியது போன்று உணர்வு எனவும், மீளவும் அந்தக் கனவை காண முடியாது என்பது தமக்கு தெரியும் எனவும் அவர் தமது ஓய்வு பற்றி குறிப்பிட்டுள்ளார். டோடி கலந்து கொண்ட இறுதிப் போட்டியில் ரோம கழகம் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் டியகோ கழகத்தை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.
Spread the love
Add Comment