ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்தடுத்து இருமுறை லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின்; பாதர்வா மற்றும் தோடா மண்டலங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதாகவும் இந்தநிலஅதிர்வு தலைநகர் டெல்லி உட்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 7.23 மணியளவில் பாதர்வா மண்டலத்தில் நிகழ்ந்த முதல் அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து பாதர்வா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலஅதிர்வை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
கடந்த 2013-ல் மட்டும் பாதர்வா பள்ளத்தாக்கில் 27 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.