Home இலங்கை மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு அனைத்து மத தலைவர்களும் ஒரே அரங்குக்கு வர வேண்டும் – ஜனாதிபதி

மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு அனைத்து மத தலைவர்களும் ஒரே அரங்குக்கு வர வேண்டும் – ஜனாதிபதி

by admin

நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக  உரியவாறு சட்டத்தை அமுல்படுத்துவதுடன், அந்த முரண்பாடுகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு விடயங்களைத் தெளிவுபடுத்தக்கூடிய பொது செயற்திட்டத்திற்காக அனைத்து மத தலைவர்களும் ஒரே அரங்குக்கு வர வேண்டும் எனத்  தெரிவித்த ஜனாதிபதி;, நாட்டில் ஒற்றுமையின்மையை விதைக்கும் இன, மத முரண்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாதெனவும் தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மதங்களுக்கிடையிலான ஆலோசனைப் பேரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகள் தொடர்பில் அந்தந்த மாவட்ட மட்டத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்காக தனது ஆலோசனைக்கமைய அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அக் குழுவை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்த வேண்டியதன் முக்கியத்தவத்தையும் ஜனாதிபதி; சுட்டிக் காட்டினார்.

அத்துடன், மதங்களுக்கிடையிலான ஆலோசனைப் பேரவை ஆகக்குறைந்தது மாதத்துக்கு ஒரு தடவையாவது கூட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி இன்று இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை தொடர்பான விசேட விதந்துரைகளை தான் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்படும் இன, மத முரண்பாடுகளின் போது நடுநிலையாகவும், பக்கச்சார்பற்றும் செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனைத்து மத, இன மக்களும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சமாதானமான நாட்டையே அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அலுவலர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More