Home இலங்கைஅன்ஜலோ மெத்யூஸ் உபாதையினால் பாதிப்பு:-

அன்ஜலோ மெத்யூஸ் உபாதையினால் பாதிப்பு:-

by admin


இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் மெத்யூஸ் பங்கேற்பதற்கான சாத்தியம் குறைவு எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக சனிக்கிழமை நடைபெறும் போட்டிக்கு இலங்கை அணியை உபுல் தரங்க வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தசை பிடிப்பு உபாதையினால் மெத்யூஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெத்யூஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக ஐ.பி.எல் போட்டிகளில் அவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More