Home இலங்கை கருத்தமர்வுக்கென பொய்சொல்லி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது

கருத்தமர்வுக்கென பொய்சொல்லி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது

by admin

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு  உட்பட்ட  பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவியை கருத்தமர்வு எனக்கூறி  அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற  ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார்  சைக்கிளில் ஏற்றிச் சென்றமையானது  பரபரப்பை  ஏற்ப்படுத்தி உள்ளது

குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது  என அழைத்து சென்றுள்ளார்  எனவும்   ஆசிரியருக்கு பலதடவைகள் தொடர்பை ஏற்படுத்திய பொழுதும் மாணவி கருத்தரங்கில் இருக்கின்றார் சிறிது நேரத்தில் எடுங்கள் எனக் கூறுகின்றாரே தவிர மாணவியை தொடர்பு  கொள்ள முடியவில்லை என   தர்மபுரம் காவல்  நிலையத்தில்  மாணவியின் சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து சில மணிநேரத்துக்குள்  மாணவியையும் ஆசிரியரும்  விஸ்வமடு பிரதேசத்தில் வைத்து  காவல்துறையினர் கைது  செய்துள்ளனர்

மாணவி கிளிநொச்சி  சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக  கிளிநொச்சி வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆசிரியர் தர்மபுரம்  காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளளார்.
இருப்பினும் நேற்று வெள்ளிக்கிழமை எங்கும் கருத்தரங்குகள் எவையும் நடைபெற வில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது  மேலதிக விசாரணைகளின் பின்னர்  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆசிரியரை  முன்னிலப்படுத்த  இருப்பதாக தர்மபுரம் காவல் நிலையைப் பொறுப்பதிகாரி டி.எம்.சத்துரங்க தெரிவித்துள்ளார்

பாடசாலைகளுக்கு மாணவர்களை  ஆசிரியர்களை நம்பியே அனுப்புகின்றோம் இவ்வாறான வேலைகளை பார்க்கும் போது  வேலியே  பயிரை மேய்வதனைப் போல் உள்ளது. எனவே இவர்களுக்கு தகுந்த சட்டநடவடிக்கைகளை எடுங்கள் இல்லை எனில் ஆசிரியரை   எங்கள் கைகளில் தாருங்கள் நாங்கள் தீர்ப்பினை வழங்குகின்றோம் என தர்மபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் கொந்தளிததனைக் காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More