காணாமல் போன மியான்மார் ராணுவத்துக்கு சொந்தமான விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாவே நகரில் இருந்து 136 மைல்கள் தொலைவில் கடலில் விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை வீரர்கள் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 105 பயணிகளும் 11 விமான ஊழியர்களுமாக 116 பேருடன் குறித்த விமானம் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் காணாமல் போனதாக அறிவிக்க்பபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மியான்மாரில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 116 பேருடன் காணாமல் போயுள்ளது
Jun 7, 2017 @ 11:28
மியான்மாரில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று பிற்பகல் வேளையில் 105 பயணிகளும் 11 விமான ஊழியர்களுமாக 116 பேருடன் யாங்கோன் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த விமானம் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.