172
இந்தியாவின் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் சட்டரீதியற்று இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
தொழிற்சாலையின் வெடிமருந்து அறையில் ஏற்பட்ட தீ ஏனைய பகுதிகளுக்கும் விரைவாக பரவியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்த போதும் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் புகைபிடித்ததால் தீ விபத்து நடைபெற்றதாக தெரிவித்துள்ள போலீசார், பட்டாசு தொழிற்சாலையானது அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love