விளையாட்டு

தென் ஆபிரிக்க அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில், பலம்பொருந்திய தென் ஆபிரிக்க அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்துள்ளது. பெர்மிங்ஹம் எக்பெஸ்டனில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு மழையின் குறுக்கீடு காணப்பட்டது.

டக்வர்த் என்ட் லுயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி 19 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டகளை இழந்து 219 ஓட்டங்களை தென் ஆபிரிக்கா பெற்றுக்கொண்டது. இதில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 27 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டிருந்த போது போட்டிக்கு மழை குறுக்கீடு செய்தது.

இதனால் டக்வர்த் என்ட் லுயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி 19 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகார் ஸாமான் மற்றும் பார்பர் அஸாம் ஆகியோர் தலா 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply