கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது 5 நட்சத்திர விடுதிகளில் உள்ள மதுபான கடைகள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு மூடப்பட்ட மதுபானக்கடைகளை மீண்டும் திறக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான தற்போதைய ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, அரசுக்கு சிபாரிசு செய்தது.
அதன்படி புதிய மதுபான கொள்கையை அறிவித்துள்ள கேரள அரசு, எதிர்வரும் ஜூலை 1ம்திகதி முதல் மீண்டும் மதுபானக்கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க முடிவு செய்து உள்ளது.
எனினும் மதுபானம் அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21 வயதில் இருந்து 23 வயதாக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.