Home இலங்கைமஹிந்த, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் ஜப்பானில் இரகசிய பேச்சுவார்த்தை

மஹிந்த, சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் ஜப்பானில் இரகசிய பேச்சுவார்த்தை

by admin


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் சில சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் இவ்வாறு மஹிந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட முன்னதாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களது ஆதரவினை மஹிந்த பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சியை பலப்படுத்திக் கொள்ள சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவியை மஹிந்த நாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More