இலங்கை

ராஜபக்ஸக்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தும் முயற்சியில் மஹிந்த


தமது குடும்பத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

விமான நிலைய மற்றும் விமான சேவைகளின் தலைவர் காமினி அபேரட்ன எனப்படும் டெக்ஸி அபேவின் உதவியை மஹிந்த ராஜபக்ஸ நாடியுள்ளார் எனவும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிரான விசாரணைகளை இடைநிறுத்துமாறு டெக்ஸி அபே ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியல் மஹிந்த தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply