பங்களாதேசில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு
பங்களாதேசில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் மேலும் பலர் இறந்திருக்கக் கூடலாம் என அஞ்சப்படுகிறது. பங்களாதேசில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேசின்; தென்கிழக்குப் பகுதியில் உள்ள ரங்கமதி, பங்கர்பான், சிட்டகாங் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் மற்ற பகுதிகளிலும் தேடுதல் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதால், பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த 4 வீரர்களும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அங்கு மிக மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது என்றும் அதையும் மீறி மீட்புக் குழுவினர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பங்காளதேசில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு
Jun 13, 2017 @ 06:18
பங்காளதேசில் நேற்றைய தினம் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதனால் இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்காள தேசத்தின் பல இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. இதனால், டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாகவும் இதனால் ரங்கமாதி மற்றும் பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதனால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பங்களாதேஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.