விளையாட்டு

வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ மீது குற்றச்சாட்டு


வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரியல் மட்ரீட் கழகத்தின் நட்சத்திர வீரர் ரெனால்டோ, பல மில்லியன் யூரோ பெறுமதியான பணத்தை வரி ஏய்ப்பு மூலம் மோசடி செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்பெய்ன் வழக்குரைஞர்களினால் ரொனால்டோவிற்கு எதிhக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர வீரரான ரொனால்டோ, 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில் 14.7 மில்லியன் யூரோக்களை வரி ஏய்ப்பு மூலம் மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை தாம் எவ்வித வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை எனவும், விசாரணைகளுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் உலகின் அதிகளவில் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான டொனால்டோ தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply