விளையாட்டு

சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி


சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுக்கொண்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றியீட்டியுள்ளதன் மூலம் இந்ததகுதி கிடைத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 211 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் ஜோ ரூட் 46 ஓட்டங்களையும், பெரிட்ஸோ 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஹசன் அலி 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 37.1 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் அசர் அலி 76 ஓட்டங்களையும் பாகர் ஸமான் 57 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.