167
ஜப்பானிய பாராளுமன்றில் சாச்சைக்குரிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத சதித் திட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் பிரகடனங்களுக்கு அமைய இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் சின்சோ அபேயின் கட்சியினால் கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
புதிய சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றிற்கு எதிரில் போராட்டமொன்றும் நடத்தப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love