147
இலங்கை இந்திய நிதி அமைச்சர்களுக்கு இடையில் தென்கொரியாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், இந்திய நிதி அமைச்சர் அருன் ஜெட்லிக்கும் இடையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியின் ஆண்டுக் கூட்டம் தென்கொரியாவில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இரு நாடுகளினதும் நிதி அமைச்சர்கள் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். நிதி சார் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
Spread the love