குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டார் வாழ் இலங்கையர்களை அவசரமாக மீள நாட்டுக்கு அழைத்துக் கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.எஸ்.பி லியனகே தெரிவித்துள்ளார்.
கட்டாரில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினால் இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்டாரில் சுமார் 1லட்சத்து 50ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தேவை ஏற்பட்டால் இந்த இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்துக் கொள்ள தேவையான பயண ஆவணங்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கட்டாருக்கும் சில முக்கிய அரபு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர விரிசல் நிலைமை மோதலாக வெடிக்கக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏதேனும் அவசர நிலையில் விமானங்கள் மூலம் இலங்கையர்களை அழைத்துக் கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.