உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ம் திகதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்தமையை தொடர்ந்து 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மூன்றாவது சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.