குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மதுபான வகைகளின் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பியர், வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வு போக்கைப் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பௌர்ணமி தினங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், மக்கள் முதல் நாளிலேயே மதுபானத்தை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திக் கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையன்று மதுபான விற்பனைக்கு தடை விதிப்பது சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் மதுபான விற்பனையை குறைப்பதற்கு பியர் மற்றும் வைன் விற்பனை தொடர்பில் நெகிழ்வான சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.