177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். சுகாதார அமைச்சின் நான்கு மாடிக் கட்டத்திற்குள் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் எவ்வாறு உட்பிரவேசித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர், சட்டம் ஒழுங்கு அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் தடுத்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ள அவர் சுகாதார அமைச்சின் சொத்துக்களுக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love