குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தும் எவரையும் அரச பணிகளில் அமர்த்துவதில்லை என்ற கொள்கைகயை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொறியியலாளர், மருத்துவர் மற்றும் அரச நிர்வாகப் பணிகளுக்காக விண்ணப்பம் செய்வோர் அரச சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தால் அவர்களுக்கு அந்தப் பணி வழங்கப்படாத வகையில் சட்டங்கள் இயற்றப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இவ்வாறான ஓர் நடைமுறை அமுல்படுத்தப்பட்டிருந்த போதும் கடந்த பத்து ஆண்டுகளில் நிர்வாக சேவையில் இணைந்து கொள்வோருக்கு இவ்வாறான சட்டங்கள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க போட்டிப் பரீட்சைகளில் சிறந்த சித்தி பெற்றிருந்தாலும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்தால் அந்தப் பதவி வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.