இலங்கை

தபால் ஊழியர்களின் போராட்டத்தை ஓர் சூழ்ச்சியாகவே நோக்க வேண்டும் – தபால்துறை அமைச்சர்


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

தபால் ஊழியர்களின் போராட்டத்தை ஒர் சூழ்ச்சியாகவே நோக்க வேண்டுமென தபால்தறை அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹாலீம் தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் இவ்வாறு நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனை செய்யப்படும் என்ற குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தபால் சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடாது பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப முயற்சிக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply