இலங்கை பிரதான செய்திகள்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை – அமைச்சரவை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றிலும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர், உயர்கல்வி அமைச்சர் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் எதிர்காலம் மற்றும் டொக்டர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்குவது குறித்த விடயங்கள் இந்த பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap