குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகில் எந்தவொரு நாட்டிலும் விளையாட்டு வீர, வீராங்கனைகளை அமைச்சர்கள் திட்டுவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். தனது முகநூல் ஊடாக பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புகழை சர்வதேச அளவில் எடுத்துச் சென்ற வீரர்கள், வீராங்கனைகள் இழிவுபடுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது அரசாங்கத்தினாலும், இந்த சமூகத்தினாலும் சுசாந்திகா ஜயசிங்க, லசித் மாலிங்க போன்றோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு கீர்த்தியை ஈட்டிக் கொடுத்த நட்சத்திர வீரர்கள் வீராங்கனைகள் கௌரமாக நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபல நடிகர் என்ற விருதினை பல தடவைகள் வென்றுள்ள தாம் விமான நிலையத்தை விட்டு வெளியேறிச் சென்றால் எந்தவொரு நாட்டிலும் தன்னை அடையாளம் தெரியாது எனினும் லசித் மாலிங்க, சுசந்திகா போன்றவர்களை இந்த உலகமே அறியும் என அவர் தெரிவித்துள்ளார்