175
அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள அர்கன்சாஸ் மாகாணத்தின் லிட்டில் ராக் பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை இசைநிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த போது திடீரென ஒருவர் துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க்படப்டுள்ளது.
தகவலறிந்து குறித்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது இரு தரப்பினரிடையே இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாவே இடம்பெற்றுள்ளது எனவும் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love