குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸின் கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பார் ரைட் தேசிய முன்னணி கட்சியின் தலைவி மரீன் லீ பென் ( Marine Le Pen ) மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸை மையமாகக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற பணியாளர் ஒருவருக்கு சம்பளம் கொடுக்க இவ்வாறு பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதியளவு ஆதாரங்கள் காணப்பட்ட காரணத்தினால் இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.