Home இலங்கைஐ.எஸ் அச்சுறுத்தல் தொடர்பில் எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை – காவல்துறையினர்

ஐ.எஸ் அச்சுறுத்தல் தொடர்பில் எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை – காவல்துறையினர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐ.எஸ் அச்சுறுத்தல் தொடர்பில் எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்த முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் குறித்து இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு பயணம் செய்திருந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான ஓர் விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும், புலனாய்வுப் பிரிவினர் சில வேளைகளில் இவ்வாறான தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More