இலங்கை

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி போராட்டத்தின் பின்னணியில் முன்னிலை சோசலிச கட்சி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி போராட்டத்தின் பின்னணியில் முன்னிலை சோசலிச கட்சி செயற்பட்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிச கட்சி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி அவர்களை போராட்டங்களுக்கு தள்ளிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை முன்னெடுத்து வரும் பல்கலைக்கழக மாணவர்கள் அதனை கைவிட்டு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டால், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து நெகிழ்வுப் போக்கினை பின்பற்ற அரசாங்கம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடிவிட முடியாது எனவும், நீதிமன்ற உத்தரவு தனியார் கல்லூரிக்கு சாதகமாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது எனவும், தற்போது அரசியல் காரணங்களுக்காக கூட்டு எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ;தரவு தனியார் கல்லூரிக்கு சாதகமாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது எனவும், தற்போது அரசியல் காரணங்களுக்காக கூட்டு எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply