Home இந்தியாகுல்பூஷன் ஜாதவ் விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் பாகிஸ்தான் நிராகரித்துள்ளது:-

குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் பாகிஸ்தான் நிராகரித்துள்ளது:-

by admin

குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: இந்தியாவின் கோரிக்கையை மீண்டும் பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது. அப்போது வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் இந்திய தரப்பில் ஜாதவுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை செய்ய அனுமதிக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. எனினும் இதற்கு பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜாதவ் பாகிஸ்தானில் உளவு மற்றும் தீவிரவாதச் செயல்களை அரங்கேற்ற இந்திய உளவுத் துறையால் அனுப்பி வைக்கப்பட்டவர் எனவும் இருநாடுகளுக்கு இடையிலான தூதரக ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது என இது தொடர்பில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் சகாரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More