169
வவுனியா – கனகராயன்குளம் – கொள்ளுபுளியங்குளம் பகுதியிலிருந்து நேற்று மாலை 13 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள வயல் காணி ஒன்றிலிருந்து மேற்படி மோட்டார் குண்டுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவற்றினை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குண்டு செயலிழக்கும் பிரிவினர், அப் பகுதியில் மேலும் வெடி பொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பில் இன்று தேடுதல் மேற்கொள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
Spread the love