குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்றிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றிற்கு எவ்வித அதிகாரங்களும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டில் விவசாயிகளின் அரசாங்கமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி அமைத்த அனைத்து அரசாங்கங்களும் விவசாயிகளை ஒரு கட்டத்தின் பின்னர் கைவிடும் நிலையை பின்பற்றியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.