குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனி இடமில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழிச் சட்டத்தை உருவாக்கி, 1972ம் ஆண்டு ஐக்கிய இலங்கை அரசியல் சாசனத்தை உருவாக்கிய பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து, பிரதிநிதித்துவம் செய்துள்ளதாகவும், அதனை இரண்டாக பிளவடையச் செய்ய மஹிந்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டை பிளவடையச் செய்வதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் தரப்பினரே இன்று சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.