Home இலங்கைஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார் – அரசாங்கம்

ஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார் – அரசாங்கம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடக ஒழுக்க விதிகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி பேசத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊடக ஒழுக்கவிதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் உத்தேச சட்டம் பற்றி ஊடகங்களுடன் பேசத் தயார் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக செய்தி மூலங்களை வெளிப்படுத்துதல் தொடர்பில் ஊடக ஒழுக்க விதியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய நலன்களை கருத்திக் கொண்டு செய்தி மூலத்தை குறிப்பிட விரும்பினால் அதனை ஊடகவியலாளர்கள் குறிப்பிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More