Home உலகம்ஸ்பெய்ன் மன்னர் பிரித்தானியாவிற்கு பயணம்

ஸ்பெய்ன் மன்னர் பிரித்தானியாவிற்கு பயணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்ன் மன்னர் பிலிப்பி மற்றும் மஹாராணி லெட்டிஸியா ஆகியோர் பிரித்தானியாவிற்கான பயணமொன்றை ஆரம்பித்துள்ளனர். ஸ்பெய்ன் அரச தம்பதியினரை பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மற்றும் மன்னர் எடின்ப்ரோ ஆகியோர் வரவேற்க உள்ளனர்.

ஸ்பெய்ன் மன்னர் ஒருவர் உத்தியோகபூர்வமாக பிரித்தானியாவுக்கு பயணம்  செய்து 31 ஆண்டுகள் கடந்துள்ளன.

இதற்கு முன்னர் தற்போதைய ஸ்பெய்ன் மன்னர் பிலிப்பியின் தந்தை ஜூவாலன் கார்லோ பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெய்ன் அரச தம்பதியினர் பிரித்தானியாவில் மூன்று நாட்கள் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More