159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில் மகிழ்ச்சி என அஸ்கிரி பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஸ்கிரி பீடாதிபதியை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏதேனும் தப்பான அபிப்பிராயங்கள் நிலவினால் அதனை தீர்ப்பதற்கு இது ஒர் நல்ல சந்தர்ப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண முதலமைச்சரின் சில கடும்போக்குடைய நிலைப்பாடுகள் வருத்தம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்
Spread the love
2 comments
அஸ்கிரி பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரரைச் சந்திக்கவிருக்கும் தமிழ்த் தலைமைகள், அவரைச் சந்திப்பதை விடுத்துத் தமது தலையைக் கருங்கல்லில் மோதுவது மேல்!
எந்தவித ஆய்வுகளுமின்றித் தான்தோன்றித்தனமாக முடிவொன்றை எடுத்துவிட்டு, அதை நியாயப்படுத்த மதவாதம் பேசுபவர்களுடன், புதிதாகப் பேச எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை?
திரு. பண்டாரநாயக்க காலத்தில் இருந்தே ஆட்சியாளர்கள் பௌத்த மதபோதகர்களை மீறி அரசியல் முடிவுகள் எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை? இன்னும் சொல்வதானால் தாம் தப்பிக்கவும், ஆட்சியதிகாரத்தைப் பாதுகாக்கவும்,, ‘பௌத்த மதத்தையும், மதபோதகர்களையும்’, தமக்கான ஒரு அரணாகவே இவர்கள் பயன்படுத்துகின்றார்கள், என்பதை மறுக்க முடியாது!
இப்போது உள்ள நிலைமையும் அதை எப்படி கையாள வேண்டும் என்பதும் எனது மரமண்டைக்கு தெரியவில்லை .அதி மேதாவிகள் பலர் நம்மிடையே இருப்பது ஆச்சரியமில்லை இதை ஆங்கிலத்தில் Pre 2009 Mindset என அழைப்பார்கள் .