இந்தியாவின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இந்தியா முழுவதும் இடம்பெறுகின்றது. காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்திவுகள் விறவிறுப்பாக நடைபெறுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம். நாடு முழுவதும் 4896 நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி; பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் 25ம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.