குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய எல்லைப் பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என லெபனான் பிரதமர் Saad al-Hariri தெரிவித்துள்ளார்.
சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைப் பகுதியில் சுதந்திரமாக செயற்பட இராணுவத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜிஹாதிய போராளிகள், ஐ.எஸ் தீவிரவாதி உள்ளிட்ட பல்வேறு போராட்டக் குழுக்களின் மையமாக சிரிய லெபானன் எல்லைப் பகுதி காணப்படுகின்றது.
எவ்வாறெனினும், சிரிய படையினருடன் லெபனான் படையினர் இணைந்து செயற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.