171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி கப்டன் அசோக் ராவோ, புதிய இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளார். இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கைகளை விஸ்தரித்துக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
Spread the love