170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கத் தேவையில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் டெங்கு நோய் காரணமாக இவ்வாறு பயண கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய எவ்வித அவசியமும் தற்போதைக்கு கிடையாது என அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் 7ம் திகதி வரையில் டெங்குவினால் 215 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80 ஆயிரத்து 732 பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love