175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டத்தில் ஜனாதிபதி இன்றையதினம் கையொப்பமிட்டுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் இன்றைய தினம் கையொப்பமிட்டதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தை உருவாக்குவதற்கு இந்த நடவடிக்கையானது ஓர் நகர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.
Spread the love