குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் குட்டாரஸ் சார்பில் அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமது அன்பிற்குரியவர்களுக்கு என்னவாயிற்று என இன்னமும் தேடித் திரியும் இலங்கை வாழ் அனைவருக்கும் இந்த அலுவலகம் பற்றிய அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அலுவலகம் வெகு விரைவில் இயங்கும் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக ஹக் தெரிவித்துள்ளார்.