149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்காக விவசாயிகளுக்கு உரிய பொருளாதார நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை வரையறுத்து உள்நாட்டு உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love