இலங்கை விளையாட்டு

இலங்கை கிரிக்கட் சபையை பொறுப்பேற்க தயாராக உள்ளேன் – அர்ஜூன ரணதுங்க


 

கிரிக்கட் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விரைவில் கடிதம் அனுப்பவுள்ளதாக   பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க   தெரிவித்துள்ளார்.

தனது மிகப்பெரிய பொறுப்பு கிரிக்கெட்டை அழிவிலிருந்து   காப்பதே எனவும்    இதுதொடர்பாக கடிதமொன்றை வரும் வாரங்களில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமர்ப்பிக்க மடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  ஜனாதிபதியோ, பிரதமரோ இதுபற்றி தன்னிடம் எதுவும் இதுவரை கேட்கவில்லை எனவும் எனினும்  மக்கள் தான் எதாவது இதுதொடர்பாக செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்  எனவும்  அதனால் மக்களுக்கு பொறுப்புகூற வேண்டிய தேவையுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்; கிரிக்கட் தொடர்பான சூதாட்டங்கள் இடம்பெறுகின்றமையானது கிரிக்கட்டின் அழிவை காட்டுகிறது. மகிந்த ராஜபக்கஷ காலத்தில் கிரிக்கட் விளையாட்டில் அரசியல் தலையீடு காணப்பட்டது. ஆனால் அதன் தாக்கம் பெரிதாக இல்லை. காரணம் முன்னாள் கிரிக்கட் அமைச்சர் மகிந்தாநந்த அலுத்கமகே கிரிக்கட் சூதாட்டத்துக்கு இடம்கொடுக்கவி;லலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பு குறி;பிட்டது போல 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டி முன்னதே தீர்மானிக்கப்பட்டது எனவும்   யாராவது சிபாரிசு செய்தால்; இலங்கை கிரிக்கட் சபையை பொறுப்பேற்க   தயாராக உள்ளேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply