குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலாளரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் பிழையான தகவல்களும் இருக்கக்கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை தொடர்பில் காட்டி வரும் பக்கச்சார்பற்ற கரிசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைச் செயலாளர் ஜிப்ரி பெல்ட்மன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றைய தினம் மாலை சந்தித்திருந்தார்.
இதன்போது இலங்கை தொடர்பில் போதியளவு தெளிவு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜிப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.