குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிரு;நது பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் குறைவு என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எதிர்வரும் 2019ம் ஆண்டில் முழுiயாக வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொய்டர்ஸ் செய்தி சேவை பொருளியல் நிபுணர்களைக் கொண்டு நடத்திய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகள் வெற்றியடையக்கூடிய சாத்தியம் மூன்றில் ஒரு வீதமே காணப்படுகின்றதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.