இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பையை இங்கிலாந்து மகளிர் அணி நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் போட்டியிட்ட நிலையில் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.
அதன் படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக ஸ்சிவர் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்களைப் பெற்று எடுத்து ஆட்டமிழந்தார். டெய்லர் 45 ஓட்டங்களைப பெற்றார்.
இந்திய அணி சார்பில் ஜுலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுக்களும், பூனம் ராவத் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 228 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 219 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து மகளிர் அணி 9 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.