விளையாட்டு

இங்கிலாந்து பிராந்திய போட்டியொற்றில் ரோஸ் வைட்லீ 6 ஆறு ஓட்டங்களை குவித்து சாதனை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களில் ஒன்றான வொர்செஸ்டர்ஷைர் ( Worcestershire )   இன்  றோஸ் வைட்லி  ( Ross Whiteley) போட்டியொன்றில் 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

யோர்க்ஸெயார் கழகத்திற்கு எதிரான இருபதுக்கு போட்டித் தொடரில் இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யொர்க்ஸெயார் கழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் கார்ள் காவர் ( Karl Carver ) போட்டியின் 16ம் ஓவரை வீசிய போது றோஸ் வைட்லி    6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

உலக கிரிக்கட் வரலாற்றில் ஐந்து வீரர்கள் இதற்கு முன்னதாக ஒரே ஒவரில் ஆறு சிக்கஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.